Wednesday, September 29, 2004

வரலாறு - செய்திதாள்கள் வழியே

From Beirut to Jerusalem படித்தவர்களுக்கு Tom Friedman-ஐ தெரிந்திருக்கும். 1983-ல் மத்திய கிழக்கு நாடுகளின் நிகழ்வுகளைப் பதிவு செய்தமையைப் பாராட்டி புலிட்ஸர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் அனைத்துக் கட்டுரைகளும் The New york Times-ல் எழுதப்பட்டன. ரொம்ப நாளாக அவைகளைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். The New york Times-ல் பழைய இதழ்களைப் படிக்க சொத்தையே எழுதி வைக்கச் சொன்னார்கள்.

அச்சமயத்தில், பாஸ்டன் பொது நூலகத்தினர் கும்பிடப் போன தெய்வம் போல குறுக்கே வந்தனர். நான் இந்நூலகத்தில் ஒர் அங்கத்தினர்(இங்கே உள்ள தமிழ் புத்தகங்கள் பகுதியைப் பார்த்து, இரத்தக்கொதிப்பு ஏறியதைப் பற்றி பின்பு). அவர்களை கணினி மூலம் தொடர்புக் கொண்டுக் கேட்டப்போது, அடுத்த 5 நிமிடங்களில் எனக்கு ஏறத்தாழ 200 வருடத்திய The New york Times மின் படிமங்களைக் கொடுத்து விட்டனர்-இலவசமாக. அற்புதமான வரலாற்றுப் பதிவுகள். Tom Friedman கட்டுரைகளை முடித்த பின்பு இரண்டாம் உலகப் போரைப் ப்ற்றி என்ன எழுதியுள்ளனர் என்பதைப் படிக்க வேண்டும்.

இந்தியாவில் இது போல் The Hindu, Indian Express, சுதேசமித்திரன், தினம்ணி போன்ற பத்திரிக்கைகளை நூலகங்கள் சேகரித்து வைத்துள்ளனவா?

2 comments:

Badri Seshadri said...

இல்லை! தி ஹிந்துவின் இதழ்கள் 1930இலிருந்து என்று நினைக்கிறேன், கார்னல் பல்கலைக்கழகத்தில் microfiche ஆக சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. நான் பலமுறை பயன்படுத்தியுள்ளேன்.

சுதேசமித்திரன் - தெரியவில்லை, மண்ணோடு மண்ணாகப் போயிருக்கலாம். தி ஹிந்து - அவர்கள் அலுவலகத்திலேயே சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி கூட அப்படியே இருக்கலாம். கல்கத்தாவில் உள்ள நூலகத்தில் ஒருவேளை இருக்கலாம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Chandra,

vaNakkam

Could u pls drop me a line at

mathygrps at gmail dot com

or

mathygrps at yahoo dot com

nandri

- Mathy

P.S: Would it be possible for u to share those archives with me? (If that is alright with you). I tried my luck in my libraries. :(