சமீபத்தில் Cynthia Mahmood எழுதிய Fighting for Faith and Nation: Dialogues With Sikh Militants படித்தேன். 1970- 80களில் கொழுந்து விட்டு எரிந்த காலிஸ்தான் பற்றிய புத்தகம். பல காலிஸ்தான ஆதரவாளர்களின் குரல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 90-களின் மத்தியில்தான் மனித உரிமை கழகங்களின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. அதுவரை, வடக்கே நடப்பது தெற்கே தெரிவது கடினம். தெற்கிலிருந்தும் வடக்கே அவ்வாறே. 1946- 47 களில் நடந்த இனப் படுகொலைகளிலிருந்து கோத்ரா கலவரம் வரை அரசு தன்னுடைய பிரசார வாகனங்களால் அதன் உரிமை மீறல்களை மறைத்து வெற்றி கண்டுள்ளது.
எந்த பத்திரிக்கைகளும் அரசின் மனித உரிமை மீற்ல்களை வெளிக் கொண்டு வர முடிந்ததிலை. மீறும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை மாநிலம் விட்டு மாநிலம் கூட கைது செய்ய முடியும். ஆகவே செய்திகள் முழு உண்மைகளுடன் வெளி வருவதில்லை.
இந்த வகையான அறிவு நிலையுடன் இந்த புத்தகத்தை எடுதத படிப்போரை, இந்தப் புத்தகம் இரண்டு நிலைக்குத் தள்ளும்.
1) இந்தியாவில் மனித உரிமை மீறல் உண்டு.
2) இந்த புத்தகதை எழுதியவர் மனநிலை சரியில்லாதவர்.
என்னால் முதல் நிலை எடுக்க முடிந்தது.
மேலே தொடரும் முன், நான் ஒரு இந்தியன். இந்தியாவின் சாதனைகளில் எவ்வளவு பெருமை அடைகிறேனோ, அதன் சிறுமைகளில் தலை குனிபவன். மேலே படிக்கும் முன், இந்த தன்னிலை விளக்கம் அவசியமாகிறது.
இந்த புத்தகம் காலிஸ்தானத்திற்க்கு அதரவோ அல்லது எதிர்நிலையோ எடுக்கவில்லை. இதன் முக்கிய நோக்கம் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்பதைப் பதிவு செய்வது மட்டுமே.
புத்தகத்தில் வரும் ஒவ்வொரும் சீக்கிய மதத்தில் அழ்ந்த நம்பிக்கைக் கொண்டுள்ளணர். இயல்பாகவே, இந்திய அரசாங்கத்தின் மீது கோபம் கொண்டுள்ளனர். இது, 1947-லிருந்து புகைவது. நாட்டின் தானிய களஞ்சியமாக தங்கள் மாநிலம் இருக்க, மற்ற மாநிலத்தவர் பயன் பெற்று வந்தது முக்கியக் காரணம். இதை பிந்தரன்வாலே ஊதி விட தனி நாடு கேட்கும் நிலை வந்தது. அயுதம் எடுக்கப்பட்டது. பொற்கோவிலில் இராணுவம் நுழைய, பற்றியது தீ.
தீவிரவாததை பின்பற்றியவர்கள் சொல்லும் முதல் காரணம் இராணுவம் நுழைந்தது. சீக்கியர்கள் அல்லாதவர்கள் கொல்லப்பட்டதை அனைவரும் கண்டனம் செய்கிறார்கள். ஆனால் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது என்பதற்க்கு மட்டும் மௌனம் பேசுகிறது. பாகிஸ்தான் என்பது உள்ளங்கை நெல்லி.
அரசு இயந்திரமும் இவர்களை தீவிரவாதத்துக்கு தள்ளி இருக்கிறது. எண்கௌண்டர் என்ற பெயரில் சிறையில் இருந்தவர்களை கொன்றது முதல் 50 வயது பெண்மணிகளைக் கூட சிறையில் மானபங்க படுத்தியது வரை. புததகதின் முதல் அத்தியாயத்தில், ஒரு முதியவர் கண் கலங்கி தன் மனைவி சிறையில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டார் என்பதை பதிவு செய்யும் இடம் உங்களை இந்தியாவைப் பற்றித் தலை குனிய வைக்கும்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
Monday, July 12, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment