தமிழில் வரும் நல்ல புத்தகங்களை, -குறிப்பாக புனைவுக்கதைகள்- பெரிய பத்த்ரிக்கைகளில் யாரும் அடையாளம் காண்பிப்பதில்லை. சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஆராய்ச்சி, கவிதை சம்பந்தமாக நிறைய எழுதியுள்ளார். பிறகுதான் திண்ணை.காம் படிக்க ஆரம்பித்தேன். ஜெயமோகன் உட்பட பலர் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி மதிப்புரை எழுத ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. பதிப்பகங்கள் பல இன்னும் 1970-களிலே இருக்கின்றன. அமேசான்.காம் போல தமிழ் புத்தகங்கள் விற்பவர் எவரும் இலர். நான் வசிப்பதோ அமெரிக்காவில். இந்தியாவிலிருந்து புத்தகங்கள் கால் விலை என்றால் தபால் செலவு முக்கால்.
இதனிடையே, ஜெயமோகன் எழுதிய ஒரு மதிப்புரையில், புத்தகங்கள் கிடைக்கும் இடம் என்று 4 முகவரிகளைக் கொடுத்திருந்தார். அனைவரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன். திலீப் என்பவர் அடுத்த நாளே பதில் அனுப்பினார். இவ்விடத்தில் நம் பதிப்பகத்தாரின் வியாபார வேகத்தையும் சொல்ல வேண்டும். மின்னஞ்சலில் தொடர்ப்பு கொண்டால், ஒன்று அது காலாவதி ஆகியிருக்கும். இல்லை கிணற்றில் போட்ட கல்லாகும். திலீப் மறுநாளே, பதில் எழுதி, ஆச்சரியப்படுத்தினார்.
உடனே, அசோகமித்திரனின் சிறுகதை தொகுதிகள், புலிநகக்கொண்றை, ராஜ் கௌதமன் எழுதிய காலச்சுமை, சிலுவைராஜ் சரித்திரம் முதலிய புத்தகங்களை வாங்கினேன். திலிப் அவர்கள், புத்தகங்களை என் சகோதரரின் பெங்களூர் முகவரிக்கு அனுப்பி வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தும் வரை என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு வைத்த்திருந்தார். மறுபடியும் அவர் கொடுத்த பட்டியலில் இருந்து,ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுதிகி ராஜநாராயனணின் சிறுகதைகள் முழுத்தொகுதிபுஷ்பராஜாவின் ஈழ போரட்டத்தில் எனது சட்சியம் ஜெயகாந்தனின் சிந்தையில் ஆயிரம் ஜெயமோகனின் காடுகாலவரிசைபடுத்தப்பட்ட பாரதி படைப்புகள்(1 - 4 தொகுதிகள்)T ஜானகிராமனின் சிறுகதைகள் முழுத்தொகுதிஆக மொத்தம் ரூ4000/- சொச்சத்துக்கு வாங்கினேன்(மொதத செலவும் என் சகோதரருடையது :-) ).
மனம் திருப்தியாக இருந்தது, தமிழில் இவ்வளவு மகத்தான தொகுதிகளை வாங்கியதில். அடுத்த முறை ஊர் செல்லும்போது, எடுத்து வருவதாக முடிவு செய்துள்ளேன்.
Wednesday, July 28, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment