Monday, December 06, 2004

தமிழ் படங்களின் பாடல் காட்சிகள்

அந்தப் படத்தின் பாடல்கள் இனிமை. இளையராஜாவின் கற்பனை சிறகடிக்க எஸ்.பி.பி, எஸ். ஜானகி உயிரைக் கொடுக்க, பாடலாசிரியர்(கள்) தமிழை ஆள, ஒலி நாடா வந்த அன்றே பாடல்கள் முதல் இடத்தைப் பிடிக்க படம் பார்க்கச் சென்ற இரசிகர் கூட்டம் பாடல் காட்சிகள் வந்த உடன், டீக்கடையை நோக்கி ஓடுகிறார்கள். பாடல்கள் காட்சியாக்கப் பட்ட விதம் அப்படி.

பரினாம வளர்ச்சிகள் அடைந்தவை இவ்வுலகில் எத்தனையோ. அமீபாவிலிருந்து, தி.மு.க. கடவுளை வணங்க(யாரும் பார்க்காதபோது?) ஆரம்பித்தது வரை. பாடல் காட்சிகள் திரைப்படத்தின் முதுகெலும்பு. ஹாலிவுட்டிலும் பாடல்கள் இருந்ததுண்டு. 1970களில் கூட John Travolta தோல் சட்டை அணிந்து Grease -ல் கதாநாயகியைப் பார்த்து காதல் சொட்ட(வெய்யிலால் வேர்வையும் சொட்ட) பாடிக் கொண்டிருப்பார். அதன் பிறகு, மக்கள் பாடல்கள் வைத்தால் சீட்டைக் கிழிப்போம் என மிரட்ட பாடல்கள் விடைப் பெற்றன.

ஆனால் தமிழில் பாடல்கள் இல்லையென்றால் திரையரங்குகளை நாய் கூடத் தீண்டாது. நான் பாடல்களுக்கு எதிரியல்ல. அவை படமாக்கப்படும் விதத்திற்கு. 'நினைவெல்லாம் நித்யா' நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். 'கல்யாண பரிசு' சிரீதர் எடுத்த படம். பாடல்கள் ஒவ்வொன்றையும் இளையராஜா இழைத்திருந்தார். படம் ஓடவில்லை. நான் பார்க்கவில்லை. ஆனால் ஆச்சரியப்பட்டேன். பாடல்களுக்காகவாவது ஓடியிருக்கவேண்டும்( உ-ம். 'பயணங்கள் முடிவதில்லை') .

ஒரு 'ஓளியும் ஓலியும்' நிகழ்ச்சியில் 'நினைவெல்லாம் நித்யா' வின் முத்திரைப் பாடலான 'பனிவிழும் மலர்வனம்' பார்த்தபோதுதான், நம் இரசிகர் பெருமக்கள் ஏன் இப்படத்தைத் துரத்தினார்கள் என தெரிந்தது. அற்புதமான இசையை, ஒரு ரெக்கார்ட் டான்ஸ் நிலைக்குப் படமாக்கியிருந்தார்கள். இடுப்பை வளைத்து நாயகனும், நாயகியும் ஆடிக்கொண்டிருக்க எனக்கு கையெல்லாம் ஆடியது, TVயை நிறுத்த.

இது ஒரு பானை சோற்றில் ஒன்று. பலமுறை சூடு கண்ட பிறகு(என் தாயார், 'உனக்குப் பட்டாத் தாண்டா தெரியும்' என்பார் :) ), இப்போதெல்லாம், எனக்குப் பிடித்த நல்ல பாடல்களை திரையில் காண்பதில்லை. ஒலி நாடாவிலோ, குறுந்தகட்டிலோ பதிவு செய்து, கேட்கிறேன்.

4 comments:

நவன் பகவதி said...

எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படங்களில் Grease ஒன்று. அதுக்கப்புறம் Cliff Richardஇன் Summer Holiday. இரண்டுமே நல்ல மியூசிக்கல்ஸ். (ஒலிவியா நியூட்டன் - ஜான் ட்ரொவோல்டா ஜோடி எத்தனை தடவை வேணும்னாலும் பார்க்கலாம்).

நினைவெல்லாம் நித்யா மாதிரி பாடல்கள் பல சமயங்களில் எரிச்சல் உண்டாக்குவது உண்மை. பாடல்களுக்காகவே படம் பார்ப்பவன் நான். அது என்ன குப்பையாயிருந்தாலும் பாட்டு நல்லாயிருந்துச்சுன்னா உடனே பார்த்திடுவேன்.

அந்த ஸ்ரீதர் படம் கல்யான பரிசா அல்லது 'தந்துவிட்டேன் என்னை'யா?

Raj Chandra said...

நவன், 'கல்யாண பரிசு', 'தந்து விட்டேன் என்னை' இரண்டுமே ஸ்ரீதர் இயக்கியதுதான். 'கல்யாண பரிசு' அவரின் முதல் படம். 'தந்து விட்டேன் என்னை' இறுதியாக இயக்கியது என நினைக்கிறேன்.

Sriks said...

Yes, Sridhar was pioneer in Tamil movie direction. He is one of the top directors in Tamil film industry.

Coming back to this article, For all the great song in this movie N[.Nithya], Sridhar could have just shown the play back singers themselves singing in the recording studio, it would have done some justice to the mind blowing score. Movie might have made some money

Instead Sridhar choose to show 2 novice trying to do something in the name of dance. In spite of this laughable song video, the songs are still green in our head! Why? and How?
Raja Rajathi Rajan “antha” Raja. summava sonaga…

Garunyan said...

kalyaNapparisu music pOddathu ilayarajah alla
saarE........ Yuvan sangar rajah!!!!!!