Sunday, February 28, 2010

உலோகம் - FIR

படித்து முடித்ததும் தோன்றியவை:

- துப்பறியும் வகையா, தமிழகத்துக்கு வரும் ஈழத் தமிழர்கள் வாழ்க்கை குறித்த வகையா என்றெல்லாம் ஒரு கூண்டில் மாட்டாமல் கதை செல்கிறது.
- 'ரா'-வின் பிடி பற்றி (புதினத்தில்) முதன் முதலாகப் படிக்கிறேன் (வேறு நூல்கள் இருந்தால் தகவல் ப்ளீஸ்).
- இந்திய உளவு இயக்க செயல்பாடுகள் பற்றி புதினத்தில் படிப்பதால் பல நிகழ்ச்சிகள் abstract-ஆக இருக்கின்றன. உ.தா. அதிகாரி வீரராகவன் கொல்லப்படுவது.
- பாத்திரங்கள் ஜெமோ-வின் முத்திரைகளுடன். அடி மனதின் கசடுகளை மிகத்திறமையாக விளக்குவதில் ஜெமோ திறமைசாலி.
- கதாநாயகன் செயல்கள் ஒருவித ஜேம்ஸ் பாண்ட பாணியில் விளக்கப்படுவதால் உணர்வுகள் அன்னியமாகின்றன.
- ஜோர்ஜ் பாத்திரம் அனுதாபத்திற்கு கொல்லப்படுவது வேஸ்ட். கதாநாயகன் (அல்லது அவனின் ஆட்கள்) சிறீ-யின் ஆளைப் போட்டுத்தள்ளி சிறீ-யை நெருங்கியிருக்க முடியும்.

இந்த நாவல் எவ்வளவு தூரம் பேசப்படும்? ஜெமோ எழுதியதாலேயே நிராகரிக்கப்படும் அபாயம் உண்டு (ஜெமோ-வா? படிக்கவே வேண்டாம். அவர் ஹிந்துத்துவ/'ரா' ஆளுங்க.).

'பெயரிலி' நாவல் ஆரம்பித்த போதே நிராகரித்து விட்டார். தமிழக அரசியல் உலகில் பேசும் தகுதி உள்ள ஒரு ஜீவன் இனிமேல் தான் அடையாளம் காணப் படவேண்டும். ஈழத் தமிழ் உலகில் சிலரிடமிருந்து (குறிப்பாக ஷோபா சக்தியிடமிருந்து) எதிர்பார்க்கிறேன்.

முடிவாக: ஷோபா சக்தியின் 'கொரில்லா', 'தேசத் துரோகி' மற்றும் 'ம்' கதைகள் அளவு உலுக்கவில்லை என்றாலும் இந்திய நாடு வந்த ஒரு மனித யந்திரத்தின் செயல்பாடுகளை விவரித்த அளவில் இந்த நாவலுக்கு ஓர் இடம் உண்டு.

விரிவாக, நேரம் இருந்தால்...

No comments: